Buku tiada untuk dipinjam.

( 0 / 0 unit )

Tempoh pinjaman (hari): 14




அபிராமி அந்தாதி – எளிய தமிழில்

oleh ஜவஹர் கண்ணன்

Penerbit - Xentral methods Sdn bhd

Kategori - Agama

அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளம் திருக்கடையூராகும். ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். பாரத பழம் பெரும் பூமியில் சக்தி வழிபாடு என்பது அனைத்துக்கும் மேலான பரம்பொருள் வழிபாடு.சக்தி வழிபாட்டில் பேரொளியாய்த் திகழ்ந்தவர் “அன்னை ஆட்கொண்ட அபிராமி பட்டர்” அன்னையின் ஸஹஸ்ர தள த்யானத்தில் ஆழ்ந்திருந்த பட்டர் சரபோஜி மன்னனின் அன்றைய திதி பற்றிய வினாவுக்கு நிலவுததும்பும் அம்மையப்பனைக் கருதி பௌர்ணமி என்று பதிலிறுத்தார். ஸஹஜ நிலை திரும்பியவுடன் தவறுணர்ந்து இதுவும் அன்னை செயலே அன்னையே சரி செய்யட்டு மென்றே அந்தாதி பாடலானார். அபிராமி தாஸன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் “அபிராமியும் லலிதையும்” உரை என் முயற்சிக்கு பெரிதும் உதவிற்று. அத்புத ஓவியர் திரு கேஷவ் வெங்கடராகவன் அவர்களின் ஓவியங்கள் என் எழுத்துக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தன. முக நூலில் இதை எழுதியபோது நண்பர்கள் பலரும் உற்சாகமளித்து ஊக்குவித்தனர் என்னைக் கவர்ந்த என் சித்தமுறை அபிராமியே ஆணையிட்டு தொடர்ச்சியாய் எளிய தமிழில் எழுத தூண்டுவித்தாள் குறையெனதாம் நிறை என்னம்மையுடையதாம்.
குறை பொறுத்து நிறை மகிழ்ந்து பொருத்தருள வேண்டுகிறேன் இதனை மின் வடிவம் செய்ய பொறியாய் இருந்து வழியும் காட்டிய திரு என். சொக்கன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். திரு டி. ஸ்ரீநிவாசன் அவர்களின் முயற்சிக்கு என் வணக்கங்கள். அன்னை அபிராமி அனைவருக்கும் அருள் புரிய இறைஞ்சுகிறேன்

Sila login untuk meminjam buku.